உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதிகள் தொடர்பில் முக்கிய தகவல்..!

இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் காணப்பட்ட அதீத வேகம் பெப்ரவரி மாதத்தில் சற்று தணிந்துள்ளது.

மோட்டார் கார்கள், எஸ்யூவி மற்றும் வேன் போன்ற பல பயணிகள் வாகனப் பிரிவுகளில் பதிவுகள் குறைந்துள்ளதாக JB Securities நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதத்தில் மொத்த வாகனப் பதிவுகள் 51,682 அலகுகளாகப் பதிவாகியுள்ளன. இது ஜனவரி மாதத்தின் 55,365 அலகுகளுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியாகும். சந்தையில் இரண்டு சக்கர வாகனங்களின் ஆதிக்கம் தொடர்ந்த போதிலும், ஏனைய வாகனப் பிரிவுகளில் மந்தநிலை காணப்பட்டது.

மோட்டார் கார் பதிவுகள் பெப்ரவரியில் 4,163 அலகுகளாகக் குறைந்தன. இதில் ஜப்பானிய இறக்குமதிகள் (3,504 அலகுகள்) தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன.

சுஸுகி (1,355), டொயோட்டா (1,095) மற்றும் டெய்ஹட்சு (610) ஆகிய நிறுவனங்கள் இப்பிரிவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீன நிறுவனங்களான BAW மற்றும் BYD ஆகியவற்றிலிருந்து 236 கார்கள் பதிவாகியுள்ளன.

புதிய மோட்டார் கார் பிரிவில், 5 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான விலையுடைய BAW E7 என்ற எலக்ட்ரிக் கார் 193 அலகுகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் சுஸுகி வேகன் ஆர் அதிகளவில் விரும்பப்பட்டுள்ளது.

இப்பிரிவில் சிறிய கார்களே 96.3 வீத பங்களிப்பை வழங்கியுள்ளன. சொகுசு வாகனப் பிரிவில் Mercedes-Benz (C-Class, E-Class) முன்னிலை வகிக்கிறது. அத்துடன், பெப்ரவரியில் ஒரு Porsche Carrera, ஒரு Rolls-Royce Cullinan மற்றும் இரண்டு Bentley ரக அதி சொகுசு வாகனங்களும் பதிவாகியுள்ளன.

எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் பிரிவில் டொயோட்டா ரைய்ஸ் அதிகளவில் பதிவாகியுள்ளது. இப்பிரிவில் ஹோண்டா வெசல் மற்றும் சுஸுகி ஃப்ரொன்க்ஸ் ஆகியவையும் கணிசமான பங்கைப் பெற்றுள்ளன.

1,500 CC க்கும் குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட சிறிய கிராஸ்ஓவர் வாகனங்களே 94 வீத சந்தையை ஆக்கிரமித்துள்ளன. மின்சார வாகனப் பதிவுகள் பெப்ரவரியில் 3,332 ஆகக் பதிவாகின.

இதில் 2,845 அலகுகள் இரண்டு சக்கர வாகனங்களாகும். இரண்டு சக்கர வாகனச் சந்தையில் பஜாஜ் 27.6 வீத சந்தைப் பங்குடன் முதலிடத்தில் உள்ளது. மூன்று சக்கர வாகனப் பதிவுகள் 4,060 ஆக அதிகரித்துள்ளதுடன், இதில் பஜாஜ் நிறுவனம் 81.8 வீத ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.

வணிக வாகனப் பிரிவில் பிக்-அப் ட்ரக்குகள் மற்றும் பேருந்துகளின் பதிவுகள் குறைந்துள்ளன. உள்ளூரில் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7,531 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் காணப்பட்ட இந்த வாகனப் பதிவு எண்ணிக்கை, முழுமையான நுகர்வோர் தேவையைக் பிரதிபலிக்கவில்லை என்றும், சந்தை இன்னும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் JB Securities நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முர்தசா ஜாபர்ஜி தெரிவித்துள்ளார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp