உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் பொருளாதார் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளதாக . சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளதாக . சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

இலங்கையில் பொருளாதார மீளெழுச்சி வேகமடைந்து வருகின்றபோதும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதன்காரணமாக, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்யவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன் ஊடகப்பேச்சாளர் ஜூலி கோசாக், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவானது மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்த உடனேயே, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக நான்காவது தவணைக்கான 334 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இலங்கைக்கான மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது.
அதேநேரம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் பலனளித்து வருவதோடு, பொருளாதார மீள் எழுச்சியானது வேகமடைந்து வருகின்றது.

அத்துடன் இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வருமானத்துக்கான சூழல் மேம்பட்டு வருகிறது, வெளிநாட்டுக் கையிருப்பும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2024 இல் 5 சதவீதத்தை எட்டியது, மேலும் இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 5சதவீதத்தை எட்டியமையும் முக்கியமான விடயமாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டில் பொருளாதார மீள் எழுச்சியானது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் மேற்டி முன்னேற்றங்கள் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் மிகவும் சாதகமானவையாகும்.
இவ்வாறாக நேர்மறையான நிலைமைகள் காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது.
எனவே பாரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்தச் செயற்பாடுகளை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார் .

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp