உலகம் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்குக் கடத்தபட இருந்த பெருமளவான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்..!

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0ae95e0af8de0ae95e0af81e0ae95e0af8d e0ae95e0ae9fe0aea4e0af8de0aea4e0aeaae0ae9f e0ae87e0aeb0e0af81 | Pathivu News

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகச் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரைக் கைது செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் வேதாளைக் கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 286 கிலோ பீடி இலை மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை, களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேதாளைக் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியாக நாட்டுப்படகில் கடத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் பொலிஸார் உச்சிப்புளி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த நாகேஸ்வரன் என்பவரிடம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில், இம்மாத்திரைகள் அனைத்தும் வேதாளையிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து, சரக்கு வாகனத்துடன் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்த மரைன் பொலிஸார், ஓட்டுநர் நாகேஸ்வரனைக் கைது செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வாகனத்தையும், மாத்திரைகளையும், கைது செய்யப்பட்ட ஓட்டுநரையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், வேதாளைக் கடற்கரையில் சட்டவிரோதக் கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நள்ளிரவில் மரைன் பொலிஸார் கடற்கரையோரம் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொலிஸார் வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள், 286 கிலோ எடை கொண்ட 10 பீடி இலை மூட்டைகளைக் கடற்கரையில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

அப் பீடி இலை மூட்டைகளையும் பறிமுதல் செய்த மரைன் பொலிஸார், அவற்றையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

Pathivu News Pathivu News

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊