உள்ளூர் செய்திகள்

இரு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

முல்லைத்தீவு  குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01) புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
{{CODE 1}}
உயிரிழந்த இரு யுவதிகளும்  பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூதன் வயல் மற்றும் மாம்பூலி பகுதிகளில் இருந்து குமுழமுனை பகுதிக்குச் சென்ற இந்த இரு யுவதிகள் தமக்கு தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்று மற்றும் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு குமழமுனை கொட்டுக் கிணத்து பிள்ளையார் கோயில் கேணிக்கு சென்றுள்ளனர்.
இறந்த இரு யுவதிகளும்  புகைப்படம் எடுப்பதற்காக    கேணி படிக்கட்டில் கீழே இறங்கியுள்ளனர் மற்றைய யுவதி புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்க படிக்கட்டில் சறுக்கல் ஏற்பட்டு இருவரும் நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர் .
புகைப்படம் எடுத்த யுவதி நீரில் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்த போதும் அது முடியாது போக நீரில் மூழ்கிய நிலையில் ஒருவாராக சுதாகரித்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
இந்நிலையிலேயே ஏனைய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp