உள்ளூர் செய்திகள்

இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ் சங்கானையில் வழங்கப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில், முன்னாள் போராளியான ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp