இந்தியாவின் நியூ டெல்லியில் நடைபெறும் 28-ஆவது பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற அமர்வுகளின் போது தலைமை தாங்கும் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இந்த மாநாட்டின் போது, மாநாட்டிற்கு வெளியே இந்திய மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, இலங்கை சபாநாயகருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பாராளுமன்ற பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
