இந்திய அணியுடனான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜேமி ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிராகக் கடந்த ஜனவரி மாதம் ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது ஜேமி ஸ்மித் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அந்த தொடரை இந்தியா அணி 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வென்றதுடன் இறுதி இரண்டு போட்டிகளிலும் ஜேமி ஸ்மித் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் எதிர்வரும் வியாழக்கிழமை (6) ஆரம்பமாகவுள்ளது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதையும் படியுங்கள்>பெண்களுக்கான கடினப்பந்து கிரிகெட் மாதிரி போட்டி யாழ்ப்பாணத்தில் நடைப்பபெற்றது
https://www.youtube.com/@pathivunews/videos
