இந்தியா

இந்தியாவின் நிதியமைச்சா வரவு செலவு திட்ட தயாரிப்பு பணிகளுக்கு அல்வா கொடுத்தார்

இந்திய பாராளுமன்ற பாதீட்டு கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ஆரம்பமாகவுள்ளது

அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் சபையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

இதைத் தொடர்ந்து 2025-26 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியர்களும் அறைக்குள் பூட்டப்படும் ‘லாக்-இன்’ நடைமுறை தொடங்குவதற்கு முன் அல்வா நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அல்வா கிண்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று, பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவருக்கும் அல்வா கொடுத்தார்

இந்த நிகழ்ச்சியில் பட்ஜெட் தயாரித்தல் மற்றும் தொகுத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர்.

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp