இத்தாலியைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் யானிக் சின்னர், தனது விளையாட்டு வாழ்க்கையில் முதன்முறையாக விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், நடப்புப் பட்டதாரியான ஸ்பெயின் வீரர் காலோஸ் அல்கராஸ்-வை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் வீழ்த்தியதன் மூலம் இத்திறமையை அடைந்துள்ளார்.
இதன் மூலம், விம்பிள்டன் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் இத்தாலியர் என்ற பெருமை யானிக் சின்னருக்கு கிடைத்துள்ளது.
