உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இணையச் சட்டம்: மறுசீரமைப்புப் பணி: இறுதிக்கட்டத்தில்

இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தில்(Online Safety Act) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டத்தில் பாலின ரீதியான துன்புறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இணையவழி மிரட்டல்களைக் கையாள்வதில் உள்ள இடைவெளிகளை அரசாங்கம் இனங்கண்டுள்ளது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த மக்கள் விமர்சனங்களை அடுத்து, முழுமையான மீளாய்வுக்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு, பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

மொழிபெயர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இவை நிறைவடைந்ததும் துறைசார் குழுக்களின் ஆய்வுக்குப் பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை முறையாக ஒழுங்குபடுத்துவதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp