உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களம் மீண்டும் முடக்கப்படுமா..??

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் முறிவு காரணமாக, அதன் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று (26) பிற்பகல் 1:30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று (27.03.2026) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகளும் இயங்காது.

இதில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய இரண்டும் அடங்குகின்றன.

எனவே, கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களுக்கும் வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கணினி அமைப்பு முழுமையாக சரி செய்யப்பட்ட பின்னரே சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இது குறித்த மேலதிக அறிவிப்புகளை திணைக்களம் பின்னர் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற முடக்கல் நிலை, ஆட்பதிவுத்திணைக்களத்தில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp