நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதை தொடர்பில், தமிழரசுக் கட்சியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் வந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தொவித்த சிறிதரன், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட பணிப்புரை என்பது கட்சியின் உள்நிலைத் தீர்மானம் என தெரிவித்ள்ளார்.
இது தொடர்பாக தனிப்பட்ட கடிதம் கிடைத்தால் மட்டுமே மேலதிக விளக்கம் தரமுடியும் என்பதையும் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும், அரசாங்கத்திற்கு சார்பாகவும் சிறிதரன் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அரசியலமைப்பு பேரவையிலிருந்து பதவி விலக வேண்டும் எனக் கட்சியின் உள்நிலை அறிவிப்பு வந்துள்ளதாகவும், இதனால் கட்சியின் உள்நிலைச் சூழலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிறிதரன் பணிப்புரையைப் பற்றி தனக்கு நேரடியாக எந்த உத்தியோகபூர்வ கடிதமும் வரவில்லை என்பதையும், தமிழரசுக் கட்சி ஊடக அறிவிப்பினை மட்டுமே அறிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்மதால்
