உள்ளூர் செய்திகள்

அரசாங்கமும் எதிர்கட்சியும் கொள்கலன்கள் விடயத்தில் இணைந்து செயற்படுகின்றது- புபுது ஜயகொட

சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும் நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சி காரியாலயத்தில் நேற்று (6-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுங்கத்தில் இருந்து பரிசோதனை இல்லாமல் கடந்த ஜனவரி 19,20,21 ஆகிய தினங்களில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாபதிபதியினால் ஜனவரி 30 ஆம் திகதி குழுவொன்று அமைக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கை தற்போது சமூகமயமாக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை குறித்த குழுவின் அறிக்கையின் உண்மையான நகழ் பிரதிகள் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து உறுதிப்படுகிறது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் சுங்கத்தில் ஏற்பட்டிருந்த நெரிசல் நிலைக்கு தீர்வுகாண 3பேர் கொண்ட குழுவொன்று சுங்க பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு குறைந்த பட்சம் 2பேர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 309 கொள்கல்களையும் விடுவிப்பதற்கு ஒரு உறுப்பினர் மாத்திரம் இருந்து தனித்து தீர்மானம் எடுத்திருக்கின்றார்

அந்த கொள்கல்களில் 301 கொள்கலன்கள் சிவப்பு நிற ஸ்டிகர் ஒட்டப்பட்ட, கட்டாயமாக ஸ்கேன் பரிசோதனை மற்றும் பௌதிக பரிசோதனை செய்யப்பட வேண்டிய கொள்கல்களாகும்.
அதில் 31 கொள்கலன்கள் ஸ்கேன் பரிசோதனை கூட இன்றியே விடுவிக்கப்பட்டுள்ளன.

114 கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளபோதும் பௌதிக பரிசோதனை செய்யப்படவில்லை.

ஏனைய 158 கொள்கல்களும் மஞ்சள் நிர ஸ்டிகர் ஒட்டப்பட்டவைகளாகும்.

அவை சட்த்தின் பிரகாரம் ஸ்கேன் பரிசோNனை செய்யப்பட்டு, அதன் பொருட்களின் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

அவற்றில் 113 கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 55 கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோதும் மாதிரி பரிசோதனை செய்யப்படவில்லை.
இது பாரிய விடயமாகும்.

இந்த தீர்மானம் சுங்க கட்டளைச்சட்டம் மற்றும் சுங்கத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை மீறும் நடவடிக்கை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு இதற்கு முன்பும் பரிசோதனைகள் இன்றி கொள்கலன்கள் வடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் பல் சந்தர்ப்பங்களில் 2218 கொள்கலன்கள் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 999 சிவப்பு ஸ்டிகர் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் என்கதுடன் சஞ்சள் ஸ்டிகர் ஒட்டப்பட்ட 1218 கொள்கலன்கள் இருந்துள்ளதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தமுறை விடுவிக்கப்பட்டுள்ள 309 கொள்கலன்களின் உரித்துடைய இறக்குமதியாளர்கள் 65 பேருக்கும் இதற்கு முன்னரும் இந்த சலுகை கிடைத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் அரசாங்கம் இந்த மோசடியின் பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிக்கொள்வதுடன் எதிர்க்கட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகளுக்கு மோசடி குற்றச்சாட்டு தெரிவிப்பதே இடம்பெறும்.
நீண்டகாலமாக இந்த மோசடி செயலை மேற்கொண்டுவரும் வியாபாரிகள் விடுதலையாகின்றனர்.
இந்த வியாபாரிகளை மறைத்து பாதுகாப்பதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உத்தியோகபூர்வமற்ற இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவே தெரிகிறது.

எனவே இந்த மோசடி வியாபாரிகளைi வெளிப்படுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுகின்றோம் என்றார்.

சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும் நடவடிக்கை நீpண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவே விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த வியாபாரிகளை மறைத்து பாதுகாப்பதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உத்தியோகபூர்வமற்ற இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவே தெரிகிறது.
அதனால் குறித்த வியாபாரிகளின் நிறுவனங்களின் பெயர் பட்டியலை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp