உலகம்

அயதுல்லா அலி கமேனியின் வரலாறு..!

1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார்.
1962 இல் ஷா மொஹமட் ரேசா பஹ்லவிக்கு எதிராக அயதுல்லா கொமேனியின் மத எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார்.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அலி கமேனி துணை பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை ஒழுங்கமைக்க உதவினார்.
1989 ஜூன் மாதம் கொமேனியின் மறைவுக்குப் பிறகு, நிபுணர்கள் பேரவை அலி கமேனியை புதிய அதி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
அரசியலமைப்பு விதிகளின்படி ஷியா மத குருமார்களிடையே தேவையான தகுதியான ‘மர்ஜா-ஏ தக்லித்’ அல்லது ‘கிராண்ட் அயதுல்லா’ நிலையை அவர் அடைந்திருக்கவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தச் சூழலைச் சரிசெய்யும் வகையில், அதி உச்சத் தலைவர் இஸ்லாமிய புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு திருத்தப்பட்டது.
இதன் மூலம் அலி கமேனி அயதுல்லாவாக மாறவும், அதி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.
அவர் ஈரானின் அரசியல் மற்றும் அதன் ஆயுதப்படைகளின் மீது ஒரு வலுவான பிடியைப் பேணி வந்தார்.
மேலும் ஆளும் முறைக்கு எதிரான சவால்களை சில நேரங்களில் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கினார்.
அயதுல்லா கமேனி, அமெரிக்காவுடனான தற்போதைய மோதல் உட்பட வெளிவிவகாரங்களில் தொடர்ந்து கடும்போக்கு நிலைப்பாடுகளை கையாண்டார்.
அவர் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து சந்தேகம் கொண்டவராகவே இருந்தார்.
மேலும் இஸ்ரேல் அரசு அழிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார்.
இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.
ஆறு குழந்தைகளைக் கொண்ட கமேனியின் ஆட்சியின் போது, ஈரானில் ஏழு ஜனாதிபதிகள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp