உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக 2020-ம் ஆண்டில் டிரம்ப் தெரிவாகியிருந்தால் உக்ரைன் போர் நடந்திராது – ரஸ்சிய ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.

அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
உக்ரைன் மீதான ரஸ்சியாவின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்காது.

இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்தவேண்டும்.

உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஸ்சியா முன்வர வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஸ்சிய ஜனாதிபதி நேற்று (24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது ஜனாதிபதியாக இருந்திருந்தால் 2022-ல் உக்ரைன் போர் வந்திருக்காது.

டிரம்ப் புத்திசாலியான நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட.
அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஸ்சியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp