உலகம்

அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்தியரான காஸ் படேல் நியமனம்

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி; தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
கடந்த மாதம் டிரம்ப் ஜனாதிபதி;யாக பொறுப்பேற்றார்.
அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஸ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஸ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.
இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி; தேர்தலில் ரஸ்யாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த காஸ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp