உலகம்

அமெரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை நிறுத்தியதை ரஸ்யா வரவேற்றுள்ளது

அமெரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை நிறுத்தியதை ரஸ்யா வரவேற்றுள்ளது

உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார்.

சமாதானத்திற்கான மிகச்சிறந்த பங்களிப்பு இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் முயலக்கூடும் என தெரிவித்துள்ள கிரெம்ளின் பேச்சாளர் ஆனால் முக்கியமான அதிகளவான ஆயுதங்கள் அமெரிக்காவிடமிருந்தே கிடைக்கின்றன என தெரிவித்துள்ளது.

ரஸ்யாவிற்கு எதிரான தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவகின்றது என வெளியான தகவல்களையும் மொஸ்கோ வரவேற்றுள்ளது.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp