உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அன்னையர் தினமான நேற்று தன்னுயிர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய தாய்- நெகிழ்ச்சி சம்பவம்

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் நேற்று (11-05) அதிகாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார்.

குழந்தையை காப்பாற்றிய 45 வயதுடைய தாய் பின்னர் உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது.

கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து தாயும் குழந்தையும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், 9 மாதங்களேயான குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (11-05) ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டப்பட்ட வேளையில் இந்த துயரச் சம்பவத்தின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp