முக்கிய செய்திகள்

அனுர புத்தாவுக்கு ‘நான் மகிந்த ராஜபக்ச என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த தடார் அடி அடித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்

அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார்

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை போல மக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்

எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால் எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு ஏற்கனவே தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதில் அனுரகுமாரதிசநாயக்க அரசியல் மேடைகளில் மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மகிந்த குற்றம் சுமத்தியுள்ளார்

தனது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர் இதனை செய்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp