வடக்கிலும் கிழக்கிலும் தலைமைத்துவம் என்றால் என்ன பண்பு, பண்பாடு என்றால் என்ன பக்குவம் என்றால் என்ன என்று தெரியாத நிலையில் இன்றைய தலைமுறையினர் வாழ்வதாக ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்
இதனால் பல துன்பங்களை துயரங்களை அனுபவித்து வருகின்றோம் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
அன்னை, சிவத் தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி ஜனனதினம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார் .
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அன்னையின் நிழலில் வாழுகின்ற பிள்ளைகள் கல்வி கற்பித்து பட்டதாரிகளாக்கி ஆலயச் சூழலில் வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம்.
அன்னையின் தீர்க்க தரிசனத்தால் கோவில்கள் சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது
அன்னையின் பெயரில் பல நிதியங்களை உருவாக்கி வைத்தியசாலைகள், பாடசாலைகள் உதவிகள் செய்து வருவதோடு பசியோடு வருபவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றது.
பல சத்திரங்கள் மடங்கள் இருந்த நிலையில் இன்று அவை கொத்துரொட்டிக் கடைகளாக மாறியுள்ளது
பல மடங்கள் குறிப்பாக அன்னை சத்திர மடம் கடையம்மா மடம் கந்தர் மடம் இன்று இல்லாது போயுள்ளது என ஆறுதிருமுருகன் மேலும் தெரிவித்துள்ளாhர்