Thursday, January 9, 2025
Homeஉள்ளூர்பேசு பொருளாக மாறியுள்ள வாகன அலங்காரத்தின் வரம்புகள் என்ன?

பேசு பொருளாக மாறியுள்ள வாகன அலங்காரத்தின் வரம்புகள் என்ன?

பல்வேறு அலங்கார பொருட்களை பொறுத்தி இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் தற்போது நாட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளன.

அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக மாற்றியமைக்கப்பட்ட சாதனங்களால் விபத்தின் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அவற்றை அகற்ற பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு பேசும் பொருளாக மாறியுள்ளது.

பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு எந்தவித நவீனமயமாக்கலும் செய்ய முடியாதா?

‘க்ளீன் சிறிலங்கா’ திட்டம் அமுல்படுத்தப்படும் சூழலில், பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் மேலதிக உதிபாகங்களை பொறுத்தி இயங்கும் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பொலிஸார் சோதனையிடுவதை சில தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அலங்கார பாகங்கள் கூட பொலிஸாரினால் நீக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

இது தொடர்பில்  பல்வேறு சந்தர்ப்பங்களில் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சில அலங்காரங்களை மேற்கொள்ள மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கண்டறியப்பட்டது.

ஆனால் இது பல அளவுகோல்களின் கீழ் செய்யப்படலாம்.

சில அலங்காரங்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன்படி, பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் உல்லாசப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளை நவீனமயமாக்க 22 நிபந்தனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதன் கீழ்,

  • பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை நிறுவும் போது, அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளில் இருந்து விலகாத வகையில் வட்டக் குழாய்களை மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் கூர்மையான பாகங்கள், பந்துகள், கூடுதல் விளக்குகள் போன்றவற்றை நிறுவக்கூடாது.
  •  பேருந்தில் ஒலிப்பான் பொருத்தும் போது மோட்டார் வாகன சட்டத்திற்கு அமைய இருக்க வேண்டும்.
  •  ரிம் கப்களை சக்கரங்களில் பொருத்தும் போது, அவை வெளியே துருத்திக்கொள்ளும் வகையில் அல்லது வெளிப்புறத்திற்கு ஆபத்தாக இருக்கும் வகையில் அமைக்கக் கூடாது.
  •  வெளிப்குதிகளில் ஒளியுடன் கூடிய விளக்குகளை பொருத்துவதற்கு 20,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.
  •  இது போன்ற பேருந்துகளில் மட்டுமே இன்டீரியர் லைட் பேட்டர்ன் சிஸ்டம்களை பொருத்த முடியும் என்பதுடன் அதன் கட்டணம் 10,000 ரூபாயாகும்.
  •  அந்த பேருந்துகளின் முன்பக்க பம்பரை மாற்றியமைத்தல், கூர்மையான விளிம்புகள் மற்றும் வடிவங்கள் இல்லாமல் ஃபைபர் அல்லது பிளாஸ்டிக் போன்ற லேசான பொருட்களால் செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதனை முன் முகத்திலிருந்து 10 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  •  கூர்மையான விளிம்புகள் மற்றும் ஆபத்தான வடிவங்கள் இல்லாத ஏணியை பேருந்தின் பின்புறத்தில் நிறுவலாம் என்ற போதும், பயணிகளுக்கு ஆபத்தோ அல்லது இடையூறோ இருக்கக்கூடாது.
  •  பேருந்தின் பிரதான பகுதியை மாற்றாமல் கூர்மையான விளிம்புகள் மற்றும் ஆபத்தான வடிவங்கள் இல்லாத ஸ்பாய்லரை நிறுவவும் முடியும்.

எவ்வாறாயினும், இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தை மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் 145ஆவது பிரிவின் பிரகாரம் பயன்படுத்த வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சட்டத்தில் வாகனங்களைப் பயன்படுத்துவதால், வீதியில் அல்லது அதை ஒட்டியுள்ள எந்தவொரு நபரின் சொத்துகளுக்கோ அல்லது வாகனங்களுக்கோ ஆபத்து அல்லது சேதம் ஏற்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் பாவனையில் அன்றைய காலப்பகுதியில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் உரிய அங்கீகாரம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 நிபந்தனைகளின் கீழ் முச்சக்கர வண்டிகளை நிறுவுதல் மற்றும் அலங்கரிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் கீழ்,

  •  வீதியை பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து அல்லது இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கரவண்டியின் பின்புறம் கூர்மையான விளிம்புகள் இல்லாத ஏணியை அலங்கார நோக்கங்களுக்காக மட்டு ரூ.1,000 கட்டணம் செலுத்தி பொருத்திக்கொள்ள முடியும்.
  •  முகப்பு விளக்குகளுக்கு பதிலாக டுநுனு விளக்குகள் பொருத்துவதற்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பொருத்துக் கொள்ளலாம். மேலும் முகப்பு விளக்குகளின் இருபுறமும் சிக்னல் விளக்குகள் மற்றும் பார்க்கிங் விளக்குகள் ஆகியவற்றையும் பொருத்தலாம்.

ஆனால் அங்கு வாகனத்தின் அகலம் வரம்பை மீறக்கூடாது.

  •  முச்சக்கரவண்டியின் கண்ணாடிக்கு மேலே சூரிய ஒளிக்கவசத்தை நிறுவுவதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
  •  முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் மட்கார்டுக்குப் பதிலாக உலோகத் தகடு மட்கார்டை நிறுவலாம்.
  •  பக்கவாட்டு கண்ணாடிகள் மோதினால் பின்னோக்கி செல்லும் வகையில் அமைக்க வேண்டும்.

மேலும், இரண்டு விண்ட் டிஃப்ளெக்டர்களை இடது மற்றும் வலதுபுறத்தில் நிறுவ முடியும் என்றாலும், அவை பக்க கண்ணாடிகளின் வரம்புகளிலிருந்து விலகக்கூடாது மற்றும் கூர்மையான விளிம்புகளைக் கொண்டிருக்கக்கூடாது மற்றும் உலோகப் பொருட்களால் செய்யப்படக்கூடாது.

ழூ முன் உடலின் கீழே பொருத்தப்பட்ட அனைத்து பாகங்களும் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் போன்ற இலகுரக பொருட்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

ழூ நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியை வெள்ளை இரும்பு உலோகத்தால் செய்யலாம், ஆனால் அது துருத்திக்கொண்டிருக்கும் வடிவங்கள் மற்றும் ஆபத்தான வடிவங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்>மரக்கறிகளை கழிவுகள் நிறைந்த குளத்தில் கழுவி விற்பனை!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments