ஈரானில் 2024 ஆம் ஆண்டில் 31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைக்குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2008ஆம் ஆண்டு முதல், தொண்டு நிறுவனம் ஒன்று, ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றமை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில், 2024 இல் தான், ஈரானில் பெண்களுக்கு அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2024 வரை, ஈரானில் 241 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கணித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களில் 70 சதவீதமான பெண்கள் தங்களைக் கொடுமைப்படுத்திய கணவனைக் கொன்றதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>பேசு பொருளாக மாறியுள்ள வாகன அலங்காரத்தின் வரம்புகள் என்ன?