முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து பல ஹிட் பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்தான் ஹாரீஸ் ஜெயராஜ்.
அவரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து கஜினி, 7 ஆம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
அதில் 7 ஆம் அறிவு படத்தில் போது தர்மர் கதாபாத்திரத்திற்கு இசையமைக்கஇ 6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு இசையமைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் 6 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை தேடித்தேடி சீனாவின் முக்கியமாஅ நகரங்களில் அலைந்து திரிந்துள்ளார்.
ஆனால் அவருக்கு இசைக்கருவிகள் கிடைக்கவில்லை.
அதன்பின் பழைய இசைக்கருவிகளை விற்பனை செய்யும் கடை குறித்து தெரிந்து கொண்ட ஹாரீஸ் ஜெயராஜ், அங்கு நடந்தே சென்று வாங்கியுள்ளார்.
இதற்காக அவர் 11 கிலோமீட்டர் நடந்துள்ளாராம் ஹாரீஸ்.
ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கிய கதைக்காக தெருத்தெருவாக அலைந்து இசைக்கருவிகளை வாங்கி, அதன்மூலம் இசை அமைத்துக் கொடுத்துள்ளார் ஹாரீஸ் ஜெயராஜ்.
இதையும் படியுங்கள்>சமூக வலைத்தளங்களை நம்பி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்