Thursday, January 9, 2025
Homeஉள்ளூர்தீபச்செல்வனின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு

தீபச்செல்வனின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் வெளியீடு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாப்பின் பிரமாண்ட திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2024) இடம்பெற்றது.

பெருங்களங்கள் கண்ட ஈழத் தளபதியின் கதையாக அமைந்துள்ள சயனைட் நாவல்,
2009 போருக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பெற்றிருநந்த முக்கியத்துவத்தையும் குறித்த காலத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தையும் பேசுகின்றது.

சென்னையில் உள்ள டிஸ்கவரி பப்ளிகேசன் வெளியிட்டுள்ள நாவலின் வெளியீட்டு விழாவை சுரேஷ் தமிழன் முகாமை செய்தார்.

தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்ச்சி கல்லூரியின் இயக்குனரும் ஓவியருமான மருது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,

புலம்பெயர் தமிழ் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி, வடஅமெரிக்கத் தமிழ் சங்கத்தின் மேனாள் தலைவர்களான பாலா சுவாமிநாதன் மற்றும் கால்டுவெல் வேள்நம்பி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் மீரா கதிரவன், ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், பிபிசியின் முன்னாள் செய்தியாளர் சிவராமகிருஷ்ணன், டிஸ்கவரி பப்ளிக்சேன் நிறுவனத்தின் பதிப்பாளர் முணுசாமி வேடியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதேவேளை நாவல் குறித்த விமர்சன உரையினை இந்துப் பத்திரிகையின் உதவி ஆசிரியரும் கவிஞருமான மண்குதிரை ஜெயக்குமார் ஆற்றியிருக்க, நிகழ்ச்சியினை திரைக்கலைஞர் பாலமுரளிவர்மன் தொகுத்து வழங்கியிருந்தார்.

நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>தமிழரசு கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments