Thursday, January 9, 2025
Homeமுக்கிய செய்திகள்வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் - யாழ் எம்பிக்கள்

வடக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் – யாழ் எம்பிக்கள்

புலம்பெயர் தமிழ் உறவுகள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்றைய தினம் பாரளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments