ஆலயங்கள் சமூகசேவைக்கு செலவு செய்வதைவிட வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டார்.
அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை
இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப் படியேறியுள்ளன.
புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்