பொதுதேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தல் நடத்தப்பட நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 5 கிழமைக்கு குறையாமலும் ஏழு கிழமைக்கு மேற்படாமலும் தேர்தல் தினம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் உள்ளதாக சட்ட நிபுணர்கள் சுட்டிக்க்காட்டியுள்ளனர்.
அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி தொடக்கம் 5 கிழமை கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும் 7 கிழமை கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பொது தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாத காரணத்தால் அன்றைய தினம் பொது தேர்தலை நடத்துவது சட்ட விரோதமானது என சட்டநிபுணர்கள் ; சுட்டிக்காட்டியுள்ளனர்.