பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 நடைப்பெறவுள்ள.
வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது.
இம்முறை அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களுமாக மொத்தம் அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர் அட்டைகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.
தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை தொடக்கம் வாக்காளர் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.