கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.