வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பினை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2026ம் ஆண்டிலிருந்து ஒன்றாரியோ மாகாணத்தில் மருத்துவ கற்கைகளுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவித்துள்ளது.
95 வீதமான அனுமதியினை ; ஒன்றாரியோ மாகாண மாணவர்களுக்கும் எஞ்சிய 5 வீதத்தினை கனடாவின் ஏனைய மாகாண மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பநல மருத்துவர்களாக சேவையாற்ற உத்தரவாதம் கொடுக்கும் மாணவர்களுக்கு ஒன்றாரியோ அரசாங்கம் அதிக சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முதலவர் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கமே வெளிநாட்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிப்பதில்லையென்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.