ஈரான் மீது இன்று காலை தாக்குதல் தொடுத்த இஸ்ரேல் இராணுவம், தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
‘இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதில் நடத்தி முடித்து விட்டதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாகவும் இதன் மூலம், இஸ்ரேல் மக்களுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்; எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.