ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் அவரு பாடசாலையில் 10 ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதியுள்ளார்.
அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதிபருக்கு மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
2 கடிதங்களும் தற்போது வெளிப்பட்டுள்ளது.
குறித்த மாணவியை அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கலாமென பிரதேசவாழ்; மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
2 கடிதங்களும் வெளியானதையடுத்து அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்;.