யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார்.
இறந்தவருகச்கு சில ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கிய பின் இடையியைடே வாந்தி ஏற்படுவது வழமையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதியும் காலை இரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து ; மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன் தினம் இளம் குடும்பஸ்த்தர் எலி காய்ச்சாலால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.