Monday, December 23, 2024
Homeஉலகம்பட்டினித் துயரில் நைஜீரியா 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

பட்டினித் துயரில் நைஜீரியா 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது.
பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர்,
தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர்,

அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா , வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments