கிளீன் சிறிலங்காவின் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
அந்த 18 உறுப்பினர்களும் சிங்களவர்களாகவே உள்ளனர்.
தமிழர்களோ முஸ்லிங்களோ அதில் இல்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கவலை தெரிவித்துள்ளார்
பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத நிலைப்பாடு தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறுதான் கடந்த பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தொல்லியல் ஆணைக்குழு என்கின்ற, தமிழ் பேசும் மக்களுக்குத் தொல்லைகள் கொடுத்த ஆணைக்குழுவிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இடம்பெற்றிருக்கவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்