Monday, December 23, 2024
Homeசினிமாநடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை...

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முன்னணி நடிகரான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணையை வரும் 19ம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments