முள்ளிவாய்யகால் தமிழினப்படுகொலையின் நேரடி சாட்சியான வைத்திய கலாநிதி வரதராசா நடித்த ஆவணத் திரைப்படமான பொய்யா விளக்கு 19/10/2024 சனிக்கிழமை ஸ்காபுரோவிலுள்ள (மக்கோவான் & பின்ஞ்) வூட்சைட் திரையரங்கில் பி.ப 1:00 மணிக்கு திரையிடப்படுகின்றது
தனேஷ் இயக்கிய ‘பொய்யாவிளக்கு’ ஆவணத் திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
பொய்யா விளக்கினை தமிழர்கள் மட்டுமன்றி மனித குலத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.
நம் நாட்டவரான வைத்திய கலாநிதியான வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் என பலரது பாராட்டை பெற்றது.
ஆங்கில மொழிபெயர்ப்புடன் The Lamp of Truth என அழைக்கப்படும் இத்திரைப்படம் பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது
அத்துடன் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளது
‘பொய்யாவிளக்கு’ திரைப்படம் ஒன்றரை மணிநேரம் விறுவிறுப்பாக சர்வதேச தரத்தில் பயணிக்கும் ஈழ தமிழர் வலிதாங்கிய ஆவண திரைப்படம் ஆகும்
சர்வதேச திரைதளத்தில் இரண்டாம் உலக போரின் யூத இனமக்களின் கதைகள் பல ஹொலிவூட் திரைப்படங்களாக வந்திருந்தன.
தமிழர் தரப்பிலிருந்து இத்தகைய படைப்பு வரவேண்டும் என பல தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய வெண்சங்கு கலைக்கூடத்தின் முதலாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.