Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்நவரத்தினம் கேசவராஜன் ஈழச்சினிமாவின் ஆழமான ஆளுமை

நவரத்தினம் கேசவராஜன் ஈழச்சினிமாவின் ஆழமான ஆளுமை

நவரத்தினம் கேசவராஜன்

இனிய 57 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நவரத்தினம் கேசவராஜன் பிறப்பு (19 ஐப்பசி 1962 ) இறப்பு( 9 தை 2021) ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். அமைதியான ஆர்ப்பாட்டமற்ற ஊடகவியலாளர்
அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கினார்.
ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்டவர்.
பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடலோரக் காற்று, அம்மா நலமா, பனைமரக் காடு எனப்பல முழுநீளத் திரைப்படங்களையும், அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களையும் உருவாக்கியுள்ளார்.
அரியாலை மண்ணிலே ஆரம்பமான அவரது ஈழ சினிமா மீதான காதல் யாழ் மண்ணிலேயே நிறைவடைந்தது.
கெமராவுக்கு முன்பு மட்டுமே நடிக்க தெரிந்த கேசவராஜனுக்கு மனிதர்களுக்கு முன் நடிக்க தெரியாததால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.
கோபம் இருக்கும் இடத்திலே தான் குணம் இருக்கும் என்பதனை அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
சிங்களத் திரைப்படத்துறையிலும் ஆர்வமுள்ள ஒரு படைப்பாளராக, வடக்கையும் தெற்கையும் இணைத்த ஒரு ஒரு கலைஞன் ஆகும்
பிரசன்னா விதானகே, அசோகா அந்தகம, விமுக்தி ஜெயசுந்தரா ஆகியோர் இயக்கிய மூன்று பாகத் திரைப்படத்தில் நடித்ததன் ஊடாக தென்னிலங்கையிலும் இவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments