கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்தை பெற்றுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி தொடர்இ
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை மெல்போனில் நடைபெறவுள்ளது.
நேற்று இரவு குலுக்கல் முறையில் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
இதற்கமைய ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் டென்னிஸ் தரவரிசையில் முதலாவதாக உள்ளவருமான இத்தாலியைச் சேர்ந்த ஜனிக் சின்னர், 34 ஆவது இடத்தில் உள்ள சிலியை சேர்ந்த நிக்கோலஸ் ஜாரியை எதிர்கொள்ளவுள்ளார்.
ஜானிக் சின்னர், கடந்த வருட அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரின் அரை இறுதியில் நொவெக் ஜொக்கோவிச்சையும் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வெடேவ்யையும் வீழ்த்தி முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!