ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.
2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் நேற்று (10) தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி; தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் பதவியேற்க உள்ள நிலையில், ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது.
அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் ஜனாதிபதியாக பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்தது.
டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இன்று பண மோசடி வழக்கில் நிபந்தனையின்றியும் அவருக்கு சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 130,000 டொலர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், நீதிபதி ஜுவான் எம்.மெர்ச்சன் சிறைத்தண்டனை, அபராதம் ஆகியவற்றைத் தவிர்த்து விடுவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்!