கைது செய்யப்பட்ட முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்ட அவர் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படியுங்கள்>தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்!