Saturday, January 11, 2025
Homeஉள்ளூர்யாழ் பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்கள் !

யாழ் பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்கள் !

தேயிலைச் செடிகளின் நடுவே உழைப்புச் சுரண்டல்களுக்கும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கி அடிமைப்படுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களினுடைய சமூக அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தம்முயிர் தந்த எம்மவர்களை நினைவேந்தும் மலையக தியாகிகள் தினம் ஜனவரி 10 அனுஷ்டிக்கப்படுகின்றது.

1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 2025 ஆம் ஆண்டுடன் ஆண்டுகள் 51.

இன்றுவரையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்டதொன்றாகவே நீள்கின்றது.

மலையக தியாகிகள் தினம் மற்றும் 4வது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 10.01.2024 (வெள்ளிக்கிழமை) பல்கலைக்கழக பொதுத் தூபியில் மாணவர்களினால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்>யாழில் மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியவருக்கு 25 ஆயிரம் தண்டம்!

https://www.youtube.com/@pathivunews/videos

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments