அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 239 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 34.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று இலக்கை கடந்தது.
இதையும் படியுங்கள்>செம்பியன் சிப் கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம்!