இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ், எதிர்வரும் செம்பியன் சிப் தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியிலிருந்துஇ மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை செம்பியன் சிப் தொடர் நடைபெறவுள்ளது.
குறித்த தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான கடந்த டெஸ்ட் தொடரின் போதுஇ பெட் கம்மின்ஸின் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, அவருக்கு காலில் தற்போது ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் தெரிவுக் குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னரே, பெட் கம்மின்ஸ் செம்பியன்ஸ் சிப் தொடரில் விளையாடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் செம்பியன் சிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக கிரிக்கெட் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இன்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்>டெஸ்ட் தரவரிசை – பும்ரா தொடர்ந்தும் முதலிடம்!