Friday, January 10, 2025
Homeமுக்கிய செய்திகள்யாழில் மணல் அகழ்விற்கு போலி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

யாழில் மணல் அகழ்விற்கு போலி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர்.

கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments