Friday, January 10, 2025
Homeஉலகம்லொஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டுத்தீ : 5பேர் பலி!

லொஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டுத்தீ : 5பேர் பலி!

அமெரிக்காவின் 2-வது பெரிய நகரமான லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று (8) திடீரென காட்டுத்தீ பரவ தொடங்கிய நிலையில் தீயில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன்; இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.

நேற்று மாலை, ஹோலிவுட் பவுல்வர்டில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஹோலிவுட் குன்றில் தீ பரவல் ஏற்பட்டது.

இந்த தீ பரவ தொடங்கியதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவதற்காக அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன ‘இந்த தீ கட்டுக்குள் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தாங்கள் செய்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>செம்பியன் சிப் கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம்!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments