Friday, January 10, 2025
Homeசெய்திகள்இளங்குமரன் எம்பியால் பிடிக்கப்பட்ட கனரக வாகனம் சுண்ணக்கற்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளது

இளங்குமரன் எம்பியால் பிடிக்கப்பட்ட கனரக வாகனம் சுண்ணக்கற்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது.

தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர்

இந் நிலையில், கடந்த வியாழக்கிழமை சுண்ணக்கற்களுடன் பயணித்த கனரக வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , குறித்த வழக்கின் மீதான விசாரணைகள் நேற்று (07) மன்றில் நடைபெற்றது.

அதன் போது , கனரக வாகனத்தின் உரிமையாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, பாரவூர்தியில் சட்டவிரோத சுண்ணக்கல் கடத்தல் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்திருந்தார்

கனியவளச் சட்டத்தின் கீழ் புவிச்சரிதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட முறையான அனுமதிப் பத்திரத்துக்கு அமைய சுண்ணக்கற்களை கொண்டு சென்றதாக மன்றிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தனியார் நிறுவனம் ஒன்றால் அகழப்பட்ட சுண்ணக்கற்களை சிறிய கற்களாக உடைத்து, அவற்றை காவுகை செய்வதற்கு பிறிதொரு அனுமதிப் பத்திரங்களைப் பெறவேண்டிய அவசியம் சட்டத்தில் இல்லை என்று சட்டத்தரணி அவரது சமர்ப்பணத்தில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து 5 லட்சம் ரூபா பிணையில் பாரவூர்தியையும் அதில் இருந்த சுண்ணக்கற்களையும் விடுவித்த மன்று, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய உடைக்கப்பட்ட சுண்ணக் கற்களை பகுப்பாய்வுக்காக அனுப்ப உத்தரவிட்டது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments