ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜ் அவர்களது 4ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
பிறப்பு (19 ஐப்பசி 1962 ) இறப்பு( 9 தை 2021)
நவரட்ணம் கேசவராஜ் ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார்.
அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்டவர்.
‘கடலோரக் காற்று’, ‘அம்மா நலமா’ உட்பட 6 முழுநீளத் திரைப்படங்கள், 5 குறுந்திரைப்படங்கள், 10க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி உள்ளார்.
யாழ் அரியாலை மண்ணிலே ஆரம்பமான அவரது ஈழ சினிமா மீதான காதல் யாழ் மண்ணிலேயே நிறைவடைந்தது.
தாயக விடியலுக்காய் இறுதிவரை உழைத்து உங்கள் வாழ்வைக் கலைப்பணிக்காய் அர்பணித்து ஓயாது உழைத்தீர்கள்.. உங்கள் கனவுகள் மெய்ப்படும் நின்மதியாய் உறங்குங்கள்.
தகவல்- குடும்பத்தினர்.