கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரூந்து சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது
இன்று (08) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றையதினம் பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.