அமெரிக்காவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தமை இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவருக்கு அண்மையில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்துஇ அதிக தொற்று தன்மை கொண்ட H5.N1. ரக வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும்இ அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக லூசியானா மாகாண சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதையும் படியுங்கள்> சீனாவை உலுக்கிய நில அதிர்வு – மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!